1500 ஆண்களுக்கு முன்னர் கொங்கு திருநாட்டில் சைவநெறி தழைத்தோங்க ஆதிசைவ திருமடாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது . நம் நாட்டில் சிவசமய கலாச்சாரம் வளர வேண்டி கம்பனால் சிவசமய பண்டித குருஸ்வாமிகள் என்று பட்டம் வழங்கப்பெற்று ஆதிசைவ திருமடாலயமாக நமது மடாலயம் திகழ்ந்து வருகிறது.
ஸ்ரீ மத் கனக காளி நிகழ்பந்தனம் செய்து உத்தண்ட ராஜகுரு மஸ்த குடோரி பண்டும் பரமகுரு ஸ்தாபனச்சாரியார் பஞ்சவடி தீர்த்த பிரபாவமும் பஞ்சதள பில்வாரண்ய கேஷத்திரமும் ஸ்ரீ பாலசுப்ரமணிய கடவுள் எழுந்தருளிரா நின்ற சிவகிரி மகா நகரில் இருக்கும் குல குரு ஸ்ரீலஸ்ரீ சிவசமய பண்டித குரு ஸ்வாமிகள் அவர்கள் சன்னிதானத்திலிருந்து நிறைந்த நல்லாசிகளுடன் எழுதும் ஸ்ரீ முகம்
உலகத்தில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளும் நலமுடன் வாழவும் மனித குலம் தழைத்தோங்கவும் தர்மநெறி,தர்ம சிந்தனை,தர்ம செயல்கள் லோகத்தில் பரிபூரணமாக நடக்கவும் கல்வி,ஞானம்நல்லொழுக்கம் சிறப்பாக இருக்கவும் நீர்வளம்,நிலவளம்,நோயற்ற வாழ்வு,குறையற்ற செல்வம் கிடைக்கவும், மன மகிழ்வு,ஆனந்த நிலை பெருகவும் எல்லாம் வல்ல இறைவனின் கருணையின்பால் அனைவரும் நலமுடன் வாழ நல்லாசிகள் வழங்குகின்றோம்.
சுபம்